< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் வெளியீடு

10 March 2024 10:05 PM IST
புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் கோரி தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சென்னை,
தமிழகத்தில் நடப்பாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான டெண்டர் கோரி இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 1,190 மாநகர பேருந்துகள், 672 மாநகர தாழ்வு தள பேருந்துகள், 1,138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3,000 பேருந்துகள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
புதிதாக வாங்கப்படும் பேருந்துகள், தற்போது பயன்பாட்டில் உள்ள காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக அடுத்த நிதியாண்டில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை செயலாளர் பணிந்தர ரெட்டி தெரிவித்துள்ளார்.