< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
துணைவேந்தர் தேர்வுக்குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி
|26 Sept 2023 8:54 PM IST
துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை கவர்னரின் ஒப்புதலின்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பான அறிவிப்பை கடந்த 13-ந்தேதி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை கவர்னரின் ஒப்புதலின்றி அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், அரசிதழில் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.