< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி - உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார்
|4 Feb 2024 12:29 PM IST
3 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை,
3 நாள் பயணமாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் கவர்னர் ஆர்.என். ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.
டெல்லியில் அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்கிறார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று உள்துறை மந்திரியை சந்திக்கும் நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.