< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

தினத்தந்தி
|
27 Oct 2022 6:31 AM IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

ராமேஸ்வரம்,

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது அவ்வழியாக ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 7 பேரை கைது செய்துள்ளது.

விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்