< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து
|16 Jun 2024 2:52 PM IST
தாம் அடையாத உயரங்களை தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
உலகம் முழுவதும் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தையர் தினம் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவரது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது. உலக தந்தையர் தினத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.