< Back
மாநில செய்திகள்
நடிகை ரோஜாவிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு
மாநில செய்திகள்

நடிகை ரோஜாவிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

தினத்தந்தி
|
17 Jun 2023 7:46 PM IST

நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜா முதுகுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 9-ந்தேதியன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னை,

நடிகையும், ஆந்திர மாநில மந்திரியுமான ரோஜா முதுகுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 9-ந்தேதியன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக ரோஜா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ரோஜாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். பயண நேரத்தை குறைத்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பணியை தொடங்குமாறு அறிவுரை வழங்கினார்.

இதேபோன்று உடல்நல பிரச்சினை தனக்கு ஏற்பட்டபோது, அதை எவ்வாறு எதிர்கொண்டு சமாளித்தார் என்பதையும் ரோஜாவிடம், மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். நட்பு முறையில் அன்போடும், அக்கறையோடும் நலம் விசாரித்த முதல்-அமைச்சருக்கு, தன்னுடைய இதயம் கனிந்த நன்றியை ரோஜா தெரிவித்துக்கொண்டார். இதனை ரோஜா தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, "மு.க.ஸ்டாலின் சிறந்த நிர்வாக திறன் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல் நல்ல மனிதநேயம் கொண்ட மனிதர் என்பதையும் நிரூபித்துள்ளார். வாழ்க பல்லாண்டு" என்று ரோஜா அந்த பதிவில் நெகிழ்ச்சியுடன் மேலும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் செய்திகள்