< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடக்கம்

தினத்தந்தி
|
13 Aug 2024 11:30 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூகுள் நிறுவன செயல் அதிகாரி உள்பட பல்வேறு தொழில் அத்பர்களை சந்திக்க உள்ளார். மேலும், அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமை செயலகத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள புதிய தொழில்களுக்கான அனுமதி அளிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்