< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தன்று பைக் பேரணி: அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாஜக மனு
|13 Aug 2024 12:01 PM IST
சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் சுதந்திர தினம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதிகளிலும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பைக் பேரணிக்கு அனுமதி கேட்டு அந்தந்த மாவட்ட போலீசில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இந்நிலையில், பைக் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாஜக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பைக் பேரணிக்கு அனுமதி அளிக்கக்கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு அவசர வழக்காக ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த மனு மீது இன்று மதியம் விசாரணை நடைபெற உள்ளது.