< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - ஜி.கே.வாசன் பங்கேற்பு
|25 Sept 2022 2:52 PM IST
காஞ்சீபுரத்தில் த.மா.கா. சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மக்களின் பணத்தை ஏமாற்றிய தனியார் நிறுவனங்களை கண்டித்தும் மக்களின் பணத்தை திரும்ப தரக்கோரியும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் மாற்றக்கோரி தமிழக அரசு மற்றும் போலீஸ் துறையை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சீபுரத்தில் மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமையில் நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் சங்கர், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் சங்கர், மாநில மாணவர் அணி தலைவர் யுவராஜ், மாநில மாணவரணி துணைத்தலைவர் அஜித் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் மதுராந்தகம் தெற்கு வட்டார தலைவர் ஆதிகேசவலு, வடக்கு வட்டார தலைவர் பழனி, கருங்குழி பேரூராட்சி தலைவர் உலகநாதன் கிரிதரன், குமார், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.