< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 4,100 கோடி  கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்
மாநில செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 4,100 கோடி கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்

தினத்தந்தி
|
30 Jun 2023 8:45 PM IST

வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


சென்னை,

வருமானவரித்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செய்லபட கூடிய தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கு பின்னர் இன்று வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ. 4,100 கோடி அளவுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் , தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை எனவும் , 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை எனவும் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது


மேலும் செய்திகள்