< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: கட்டணச்சீட்டு பெற ஆதார், செல்போன் எண் கட்டாயம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
|3 Dec 2022 10:05 PM IST
மகாதீப தரிசனத்திற்கு திருக்கோவில் இணையதளம் வழியாக நாளை முதல் கட்டண தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு துவங்க உள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீப தரிசனத்திற்கு பக்தர்கள் கட்டணச்சீட்டு பெற ஆதார் அட்டை, செல்போன் எண் கட்டாயம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாதீப தரிசனத்திற்கு திருக்கோவில் இணையதளம் வழியாக நாளை முதல் கட்டண தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.