< Back
ஆன்மிகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி
ஆன்மிகம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 3.12 கோடி

தினத்தந்தி
|
7 Dec 2023 9:12 PM IST

அண்ணாமலையார் கோவிலில் கடந்த 26-ந் தேதி கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்.

அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. மலை உச்சியில் காட்சி தரும் மகா தீபம் கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. தொடர்ந்து மறுநாள் காலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அண்ணாமலையார் கோவிலின் உண்டியலில் வசூலான காணிக்கை பணத்தை எண்ணும் பணியானது இன்று நடைபெற்றது. இதில் கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்கள் ரூபாய் 3.12 கோடியை பணமாக செலுத்தியுள்ளனர். மேலும் 340 கிராம் தங்கம், 1,895 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்