< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிப்பூர  பிரம்மோஸ்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிப்பூர பிரம்மோஸ்சவ விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

தினத்தந்தி
|
23 July 2022 7:57 PM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆடிப்பூர பிரம்மோஸ்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவண்ணாமலை,

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தாிசனம் செய்து விட்டு கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.

அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து உண்ணாமலை அம்மன் தங்க கொடிமரத்தின் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா வருகிற ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. 1-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் கோவில் வீதி உலாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்