< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
பொன்னேரி தாலுகாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
|3 Oct 2022 5:38 PM IST
ஆரணி ஆற்றின் கரைகளில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொன்னேரி தாலுகாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவ மழையினால் ஆரணி ஆற்றின் கரைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு பகுதிகளான ஆலாடு, மனோபுரம், சோமஞ்சேரி, பெரும்பேடு குப்பம், ஆண்டார்மடம், பிரளயம்பாக்கம், மற்றும் தத்தைமஞ்சி காட்டூர் ஆகிய இடங்களில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் பொதுப்பணித்துறையினர் ஆரணியாறு கோட்ட நீர்வள ஆதாரம் அமைப்பின் மூலம் நடைபெற்று வருகிறது. இங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொன்னேரி கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, தாசில்தார் செல்வகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.