< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருத்தணி அடுத்த நல்லாட்டூர் அரசு பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
|24 Aug 2023 8:18 PM IST
திருத்தணி அடுத்த நல்லாட்டூர் அரசு பள்ளி வளாகத்தில் வட்டார பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி கமலநாதன் தலைமை தாங்கினார். இந்த மருத்துவ முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன் கலந்து கொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அடங்கிய பெட்டகம், 20 பேருக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம், மருத்துவ அடையாள அட்டை ஆகியவற்றை பொதுமக்களுக்கு எல்.எல்.ஏ. சந்திரன் வழங்கினார். முகாமில் டாக்டர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.