திருவள்ளூர்
திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை குளம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
|திருத்தணி முருகன் கோவில் சரவண பொய்கை குளம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவண பொய்கை குளத்தில் புனித நீராடிய பின்பு மலைப்படிகள் வழியாக நடந்து மலைக்கோவிலுக்கு சென்று வழிபடுவர்.
இதுதவிர ஆண்டுதோறும் ஆடிகிருத்திகை விழாவின் போது, இந்த குளத்தில் 3 நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். இந்த நிலையில், திருக்குளத்தை தூர் வாரியும், படிகள் சீரமைக்கவும் கோவில் நிர்வாகம் தீர்மானித்து கோவில் நிதியின் மூலம் ரூ.22½ லட்சம் நிதி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது குளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக குளத்தில் உள்ள தண்ணீரை மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணிகள் முடிந்து குளத்தின் படிகள் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது குளத்தில் உள்ள 2 கிணறுகளில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.