< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 4 லட்சம் வசூல்
|23 Dec 2022 7:45 PM IST
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை வசூலானது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி மலைக்கோவிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் நடைபெற்றது.
கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 41 நாட்களில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 79 ஆயிரத்து 42 ரொக்கம் மற்றும் 708 கிராம் தங்கம், 20 கிலோ வெள்ளி ஆகியவற்றை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.