< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: காட்டு யானை தாக்கியதில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு..!
மாநில செய்திகள்

திருப்பூர்: காட்டு யானை தாக்கியதில் சுற்றுலாப் பயணி உயிரிழப்பு..!

தினத்தந்தி
|
4 Nov 2022 3:50 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே காட்டு யானைத் தாக்கியதில் சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்.

திருப்பூர்,

புதுக்கோட்டையைச் சேர்ந்த அக்பல் அலி என்பவர், மூணாறு - உடுமலை சாலையில் இரவில் வேனில் சென்றபோது, சாலையில் வந்த ஒற்றைக் காட்டு யானையைப் பார்த்து ரசிக்க, கீழே இறங்கி அருகே சென்றார்.

அப்போது, கோபமடைந்த காட்டு யானை தாக்கியதில், அக்பர் அலியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வனப்பகுதியில் சுற்றுலா செல்லும் பயணிகள், விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்