< Back
மாநில செய்திகள்
திருப்பூர்: வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
மாநில செய்திகள்

திருப்பூர்: வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த லாரி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்

தினத்தந்தி
|
10 March 2024 9:32 PM IST

ஓட்டுனர் லாரியில் இருந்து இறங்கிய சில நிமிடங்களில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் கோழித் தீவனம் ஏற்றி வந்த லாரி, எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தினார்.

தக்க சமயத்தில் ஓட்டுனர் லாரியில் இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவர் இறங்கிய சில நிமிடங்களில் லாரி முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்