< Back
மாநில செய்திகள்
திருப்பூர் துரைசாமி கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்- துரை வைகோ
மாநில செய்திகள்

திருப்பூர் துரைசாமி கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்- துரை வைகோ

தினத்தந்தி
|
29 April 2023 10:07 AM IST

மதிமுக - திமுக இணைப்பை வலியுறுத்திய திருப்பூர் துரைசாமி கடிதத்தை புறக்கணிக்க வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுகவை திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சாலசிறந்தது என்று திருப்பூர் துரைசாமி வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், மகனை அரவணைப்பதும் சந்தர்ப்பவாத அரசியலும் எள்ளி நகையாட வைத்து விட்டது எனவும் வைகோவை கடுமையாக சாடும் வகையிலும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

துரைசாமியின் இந்த அறிக்கை மதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். துரை வைகோ அளித்த பேட்டியில், " கட்சியின் பொதுக்கூட்டத்தில் விவாதிக்க வேண்டியதை பொதுவெளியில் வெளியிடுவது முறையல்ல. மதிமுக - திமுக இணைப்பு தொடர்பாக துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்