< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து
மாநில செய்திகள்

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
12 May 2024 4:11 PM IST

பிளாஸ்டிக் குடோனில் பற்றிய தீயானது, அருகில் உள்ள மர பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் பரவியுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கோணாமேடு பகுதியில் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில், பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீயானது அருகில் உள்ள மர பர்னிச்சர் தொழிற்சாலைக்கும் வேகமாக பரவியுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று விடுமுறை நாள் என்பதால், தொழிலாளர்கள் யாரும் உள்ளே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், மர பர்னிச்சர் தொழிற்சாலையில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பர்னிச்சர்கள் எரிந்து நாசமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்