< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பத்தூர்- கஞ்சா போதையில் ஒருவர் அடித்துக் கொலை
|3 Aug 2023 11:52 PM IST
திருப்பத்தூரில் கஞ்சா போதையில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் ,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை பகுதியில் விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்திற்கு 5 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதையில் வந்துள்ளனர். .
அப்போது, அங்கே விளையாடிக்கொண்டிருந்தவர்களுக்கும், கஞ்சா போதையில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த 50 வயதான கோபாலகிருஷ்ணன் என்பவரை மடக்கிய அந்த போதை கும்பல், அவரை சரமாரியாக தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அந்த கும்பல் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைதுசெய்த போலீசர், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.