< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் இரட்டை கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூர் இரட்டை கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
21 May 2022 7:20 PM GMT

திருப்பத்தூர் இரட்டை கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே பரியாமருதிபட்டி இரட்டை கண்மாயில் கடந்த 10 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாமல் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை. கடந்தாண்டு பெய்த கனமழையால் இரட்டை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. விவசாய தேவைகளுக்கு பயன்படுத்திய தண்ணீர் போக மீதி தண்ணீர் வற்ற தொடங்கியது.

தண்ணீர் வற்ற தொடங்கியதால் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் அம்பலகாரர், முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.இதையடுத்து முகநூல் பக்கத்தில் மீன்பிடித்திருவிழா என பதிவேற்றம் செய்தனர். இதையடுத்து அதிகாலை முதலே சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்மாயை சுற்றி காத்திருந்தனர்.

ஊர் அம்பலகாரர் கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.உடனே கரைகளில் காத்திருந்த மக்கள் அவர்கள் கொண்டு வந்த மீன்பிடி சாதனங்களான ஊத்தா, கச்சா, வலை, அரிகூடை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க கண்மாயில் இறங்கினர். கண்மாயில் அதிகமான பாசிகள் படர்ந்திருந்ததால் மீன்பிடிக்க முடியாமல் மீன்பிடியாளர்கள் திணறினார்கள்.பாசிகளுடன் வலைகளில் சிக்கிய ஒரு சிலருக்கு மட்டும் விரால், குரவை,கெண்டை போன்ற மீன்கள் கிடைத்தது. பாசிகள் அதிகமாக இருந்ததால் பாம்புகள் அதிகமாக பிடிபட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்