< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம் : தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
|25 Sept 2024 6:45 PM IST
தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருப்பதி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 30-ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in இனையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.