< Back
மாநில செய்திகள்
நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
மாநில செய்திகள்

நெல்லை மாவட்ட எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தினத்தந்தி
|
3 April 2023 9:05 PM IST

நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை எஸ்.பி. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்