ராணிப்பேட்டை
திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள்
|திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
நெமிலி
திருமால்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை முனிரத்தினம் எம்.எல்.ஏ.வழங்கினார்.
நெமிலியை அடுத்த திருமால்பூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருமால்பூர் ஊராட்சி மன்ற தலைவர் துலுக்காணம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சோளிங்கர் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். மொத்தம் 99 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேலபுலம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 73 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஒன்றிய தி.மு.க.செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சுகுமார், கிருஷ்ணவேணி வெங்கடேசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன், ஊராட்சி செயலாளர் இன்பநாதன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.