< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
|17 July 2023 12:15 AM IST
திருக்கோவிலூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாபு மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பாலாஜிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பாலாஜி பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவருக்கு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்ட போலீசார் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.