< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

3,250 அடி உயர அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம்

தினத்தந்தி
|
7 Dec 2022 8:10 PM GMT

3,250 அடி உயர அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

அழகர்கோவில்,

3,250 அடி உயர அழகர்மலை உச்சியில் திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை திரளான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

கள்ளழகர் கோவில்

திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என அழைக்கப்படும் மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 5-ந் தேதி அதிகாலையில் திருக்கோவிலில் கைசீக புராணம் வாசித்தல் நடந்தது.

நேற்று கார்த்திகை பவுர்ணமி நாளில் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முக்கிய நிகழ்வாக அழகர் மலை உச்சியில் சுமார் 3,250 அடி உயரத்தில் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில் அமைக்கப்பட்டிருந்த நெய் நிறைந்த தீப குண்டத்தில் மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதை பார்த்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், மற்றும் மலை அடிவாரத்தில் காத்து இருந்த பக்தர்கள் மலைதீபம் பார்த்து தரிசனம் செய்தனர்.

ெசாக்கப்பனை

அதன்பின்னர் கோவில் வளாகம் முழுவதும், உபசன்னதிகள், மண்டப வளாகங்களில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. இதை தொடர்ந்து திருக்கல்யாண மண்டபம் அருகில் மேௗதாளம் முழங்க பரிவாரங்களுடன் புறப்பாடாகி வந்த கள்ளழகர், பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. அங்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

திருக்கார்த்திகை தீப ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்