< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்
|4 April 2023 5:33 PM IST
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இங்கு விழாவின் 7-ம் நாள் முக்கிய நிகழ்வான கமலத் தேர்த்திருவிழா 1-ந்தேதி நடந்தது. இதையடுத்து 8-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசித்தனர்.