< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
திருமக்கோட்டை ரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
|17 April 2023 12:15 AM IST
திருமக்கோட்டை ரங்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம்
திருமக்கோட்டை மகாராஜபுரம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தாயாருக்கும், ரங்கநாதருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் அர்ச்சகர்கள் சாமிகளுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்து தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து ரங்கநாதர் சாமி தாயாருடன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.