< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
|2 Aug 2022 1:32 AM IST
திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூரில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பின்னர் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு மொய் எழுதினர். இதைத்தொடர்ந்து வருகிற 15-ந் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.