< Back
மாநில செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
கரூர்
மாநில செய்திகள்

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
15 Oct 2023 11:01 PM IST

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

புன்செய்தோட்டக்குறிச்சி அருகே சேங்கல்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று திருக்கல்யாண உற்சவத்தையொட்டி சுவாமிகளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு திருகல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடி நின்ற பொதுமக்கள் கோவிந்தா... கோவிந்தா... என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து உஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் மணமக்கள் பூ பந்து விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்