< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர்டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

தினத்தந்தி
|
27 Sep 2023 6:45 PM GMT

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பாடப்பிரிவுகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி கடந்த 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் பயிலும் இந்த கல்லூரி தேசிய தர மதிப்பீட்டு குழுவின் 'பி-பிளஸ்' சான்று பெற்ற நிறுவனம் ஆகும்.

இளங்கலை கல்வியியல் (பி.எட்) வகுப்பில் ஆங்கிலம், கணிதவியல், பொருளறிவியல், உயிரறிவியல், பொருளியல், வணிகவியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் கற்று தரப்படுகின்றன. பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் பி.எட். வகுப்பில் கணிதம், கணினி அறிவியல், பொருளறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர்த்து கொள்ளப்படுவர்.

சிறப்பு அம்சங்கள்

பி.எட். வகுப்பில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் ேசர்க்கப்படுகின்றனர். இங்கு திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியல், கல்விநுட்பவியல், கணினி ஆய்வகங்கள் உள்ளன. மேலும் வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் ஆசிரியர் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு இசை, நடனம் மற்றும் பயிற்சி பட்டறை வகுப்புகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன. வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை

மாணவர்களுக்கு வளாகத்தேர்வு மூலம் தமிழ்நாட்டில் சிறப்பு வாய்ந்த பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் தேர்வுக்கான (TET) வழிகாட்டல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட பி.எட். பாடப்பிரிவுகளில் ஆங்கிலம் தவிர பிற பாடப்பிரிவுகளில் குறைந்த இடங்களே உள்ளன. பி.எட். வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் www.drsacedn.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் மற்றும் அனைத்து சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரடியாக வரலாம். மேலும் விவரங்களுக்கு கல்லூரி முதல்வரை 04639-242181, 220577, 9486381123, 9042282412 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்