தூத்துக்குடி
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி என்.சி.சி.மாணவர்கள் சாதனை
|திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி என்.சி.சி.மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி(29) தமிழ்நாடு தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவின் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் தலைமையில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. வருடாந்திர பயிற்சி முகாம் ஜூன்.5-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த முகாமில் 5 கல்லூரிள், 11 பள்ளிக்கூடங்களில் இருந்து 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தேசிய மாணவர் படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல், மேப் ரீடிங், யோகா கலைகள், சமூகநல தொண்டு ெசய்தல், மரம் நடுதல், தேசிய ஒருமைப்பாட்டு விழிப்புணர்வு, கராத்தே, முதலுதவி விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து மருத்துவ அலுவலர்கள் செந்தட்டி காளை, வைத்தீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விளக்கி கூறினர். 79 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். இதில் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் 12 பேர் ரத்ததானம் செய்தனர். முகாம் பயிற்சியில் சிறந்த விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை மாணவர் முத்துவேல் முதலிடத்தையும், டிரில் பயிற்சியில் ஆதித்தனார் கல்லூரி பொருளியல் துறை மாணவர் விஜய் பிரபாகரன் முதலிடத்தையும், விஷ்ணு 2-வது இடத்தையும் பிடித்தனர். மேலும் மெரினா 2023 குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆதித்தனார் கல்லூரி விலங்கியல் துறை மாணவர் முருகப்பெருமாள், பொருளியல் துறை மாணவர் விஷ்ணு ஆகியோரும் கவுரவிக்கப்பட்டு, பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், என்.சி.சி. அதிகாரிகள் சிவமுருகன், மாதவன், ஷேக்பீர்முகமது காமீல், சத்யன், ரவீந்திரகுமார், ஐசக் கிருபாகரன், ராணுவ அதிகாரிகள் பிரகாஷ் வரதராஜன், ரவி, சுரேஷ், அருண்குமார், முருகன், என்.சி.சி. அலுவலக அமைச்சக பணியாளர்களும் செய்திருந்தனர். பதக்கங்கள் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் ஆகியோர் பாராட்டினர்.