< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
சென்னை
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சென்னை- நெல்லைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
17 Nov 2023 9:48 AM IST

சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

சென்னை,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திருச்செந்தூர் செல்ல வசதியாக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரெயில் நாளை நண்பகல் 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நாளை இரவு 10.10 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பி, வரும் 19ஆம் தேதி நண்பகல் 12.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

மேலும் செய்திகள்