< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.66 கோடி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.66 கோடி

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 66 லட்சமும், 1¼ கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் இந்த மாதம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்த பணம் மற்றும் நகைகளை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் கடந்த 23-ந்தேதியும், நேற்று முன்தினமும் நடந்தது. கோவில் நிரந்தர உண்டியல்கள், கோசாலை பராமரிப்பு உண்டியல், யானை பராமரிப்பு உண்டியல், அன்னதான உண்டியல் போன்றவற்றில் இருந்த பணம் எண்ணப்பட்டது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் தலைமையில், இணை ஆணையாளர் கார்த்திக் முன்னிலையில், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் மோகன், கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 64 ஆயிரத்து 584 இருந்தது. மேலும் தங்கம் 1 கிலோ 200 கிராம் தங்கமும், 22 கிலோ வெள்ளியும், 572 வெளிநாட்டு பணமும் கிடைத்தது.

மேலும் செய்திகள்