< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர், சாத்தான்குளம், கழுகுமலை பகுதியில்கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூர், சாத்தான்குளம், கழுகுமலை பகுதியில்கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

திருச்செந்தூர், சாத்தான்குளம், கழுகுமலை பகுதியில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திருச்செந்தூர்:

திருச்ெசந்தூர், சாத்தான்குளம், கழுகுமலை பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கருணாநிதி நினைவு தினம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு, இரும்பு ஆர்ச், வீரபாண்டியன்பட்டினம் போன்ற இடங்களில் கருணாநிதியின் உருவ படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், தி.மு.க. மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வெற்றி வேல், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் ராஜபாண்டி, நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிகோ, வீரபாண்டியன் பட்டினம் பஞ்சாயத்து துணை தலைவர் ஜெகதீஸ் வி.ராயன், மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

இதேபோன்று கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆ.பாலமுருகன் தலைமையில் சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய அலுவலகம் மற்றும் தட்டார்மடம் மெயின் பஜாரில் ஆகிய இடங்களில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் நகர தி.மு.க. சார்பில் பழைய பஸ்நிலையம் காமராஜர் சிலை முன்பு கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகா இளங்கோ முன்னிலை வகித்தார். இதில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதி உருவ படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

பரமன்குறிச்சி

பரமன்குறிச்சி மெயின் பஜாரில் கருணாநிதி உருவப்படத்திற்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உடன்குடி

உடன்குடி பேரூர் தி.மு.க. சார்பில் மெயின் பஜார், பஸ்நிலையம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பேரூர் தி.மு.க., செயலாளரும் பேருராட்சி துணைத்தலைவருமான மால் ராஜேஷ் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். இதில் பேருராட்சி நியமன குழு உறுப்பினர் ஜாண் பாஸ்கர் மற்றும் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

கழுகுமலை

கழுகுமலை அருகே உள்ள சம்பகுளம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு களப்பாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணை தலைவர் மாரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்