< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக கிடைத்த ரூ.1.81 கோடி பணம், 1.5 கிலோ தங்கம்
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக கிடைத்த ரூ.1.81 கோடி பணம், 1.5 கிலோ தங்கம்

தினத்தந்தி
|
23 Jun 2023 8:13 PM IST

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள், திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, வள்ளி குகை, நாழிக்கிணறு ஆகிய இடங்களுக்குச் செல்வதோடு, காணிக்கையாக பணம், தங்கம் உள்ளிட்டவற்றை கோவில் உண்டியல்களில் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூன் மாதத்திற்கான 2-வது உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஒரு கோடியே 81 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஒன்றரை கிலோ தங்கம், 32 கிலோ வெள்ளி, 523 வெளிநாட்டுப் பணமும் காணிக்கையாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்