< Back
மாநில செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

தினத்தந்தி
|
6 April 2023 4:15 PM IST

திருத்தணி முருகன் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில், பங்குனி மாதத்தில் தீர்த்தவாரி திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மலைப்படிகள் வழியாக வந்து மாட்டு வண்டியில் மேல்திருத்தணி, பொதட்டூர்பேட்டை ரோடு, தெக்களூர் பகுதியில் உள்ள நந்தி ஆற்றங்கரை கோவில் தோட்டத்து மண்டபத்தில் மதியம் 2.30 மணிக்கு எழுந்தருளினார். பின்னர் உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, நந்தி ஆற்றில் நீராடி மண்டபத்தில் எழுந்தருளி உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தடைந்தார். தீர்த்தவாரி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்