< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை அமாவாசையையொட்டி தீர்த்தவாரி உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை அமாவாசையையொட்டி தீர்த்தவாரி உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
9 Feb 2024 10:24 PM IST

அஸ்திர தேவரின் ஞானவேலுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி,

தை அமாவாசையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் 'அஸ்திர தேவர்' கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அஸ்திர தேவரின் ஞானவேலுக்கு பால், மஞ்சள், விபூதி, இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அஸ்திர தேவருக்கு ஆராதனை காண்பிக்கப்பட்டது. தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மேலும் செய்திகள்