கிருஷ்ணகிரி
2 ஆண்டுகளாக கடல் போல் காட்சி அளிக்கும் தீர்த்தகிரி வலசை ஏரி
|ஊத்தங்கரை:-
2 ஆண்டுகளாக கடல் போல் காட்சி அளிக்கும் தீர்த்தகிரி வலசை ஏரியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீர்த்தகிரி வலசை ஏரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி தீர்த்தகிரி வலசை ஏரி உள்ளது. பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஏரிக்கு ஜவ்வாது மலையில் இருந்து உபரிநீர் வருகிறது.
இந்த ஏரி நிரம்பி கால்வாய் மூலமாக அருகில் உள்ள சிறு, சிறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஏரி நிரம்பி தண்ணீர் தேங்கினாலும் அடிக்கடி வற்றி போகும்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஆனால் இந்த முறை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஏரிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து உள்ளது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது. எனவே இந்த ஏரியை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவை செழிப்பாக வளர்ந்து காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.