< Back
மாநில செய்திகள்
இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
கடலூர்
மாநில செய்திகள்

இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
21 May 2022 5:00 PM GMT

இறையூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம்,

பெண்ணாடம் அடுத்த இறையூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண உற்சவம், அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று முன்தினம் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாககுண்டம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பொன்னேரி, கூடலூர், கொத்தட்டை, திருவட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்