< Back
மாநில செய்திகள்
சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம்

தினத்தந்தி
|
18 Sept 2023 12:45 AM IST

திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் அளிக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அவகாசம் அளிக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.

ஆக்கிரமிப்புகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவாரூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் இளம்வழுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அகற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி உதவி கோட்ட பொறியாளர் அய்யாதுரை, இளநிலை பொறியாளர் ரவி ஆகியோர் கூறியதாவது:-

தாங்களாகவே...

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், நெடுஞ்சாலைக்கு சொந்தமான மழைநீர் வடிகாலின் மேல் பகுதிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் மற்றும் சாலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை வருகிற 20-ந் தேதிக்குள் (புதன்கிழமை) தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தவறினால் வருகிற 21-ந் தேதி, 22-ந் தேதி, 23-ந் ேததி ஆகிய 3 நாட்கள் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், காவல் துறையின் சார்பில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் அனைத்து செலவினங்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்