மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
|மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம். 2.66 கோடி நுகர்வோரில் 11 மணி நிலவரப்படி இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச., 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது.
மின் ஊழியர்கள் ஸ்ரைக் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், பேச்சுவார்த்தை நடக்கும் போதே போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல எனக் கூறினார்.