< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்- அமைச்சர் தங்கம் தென்னரசு
|9 Dec 2023 6:52 PM IST
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது.
சென்னை,
கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் மின் நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால அவகாசம் அறிவித்து நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 18-ந்தேதி வரை மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த அறிவிக்கப்பட்ட கால நீட்டிப்பானது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மின் நுகர்வோர்களுக்கும் பொருந்தும் என மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.