< Back
மாநில செய்திகள்
விபத்து காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய வக்கீல்களுக்கு அவகாசம் - பார் கவுன்சில் அறிவிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

விபத்து காப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய வக்கீல்களுக்கு அவகாசம் - பார் கவுன்சில் அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Nov 2022 4:28 AM IST

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு கூட்டு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு கூட்டு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, இந்த காப்பீட்டில் சேர அக்டோபர் 31-ந்தேதி கடைசி நாள் என்று பார் கவுன்சில் ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால், ஒரு சில வக்கீல்கள் விண்ணப்பம் செய்யாததால், அந்த கால அவகாசத்தை நீட்டித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது:-

வக்கீல்கள் விபத்தில் பலியானால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம், விபத்தில் ஊனம் அடைந்தார் ரூ.10 லட்சம், மருத்துவ சிகிச்சை பெற ரூ.1.25 லட்சம், சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுக்கும்போது, 34 வாரங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் விதமாக கூட்டு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த காப்பீட்டு திட்டத்தில் சேர பார் கவுன்சில் இணையதளம் வழியாக வக்கீல்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதற்காக வருகிற 15-ந்தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலை வாட்ஸ்ஆப் மூலம் வக்கீல்களுக்கு தெரியப்படுத்தும்படி அந்தந்த கோர்ட்டுகளில் உள்ள பார் கவுன்சில், வக்கீல் சங்கங்களை அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்