< Back
மாநில செய்திகள்
வந்தே பாரத் ரெயில் இயக்கத்தில் நேர மாற்றம்
சேலம்
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரெயில் இயக்கத்தில் நேர மாற்றம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:47 AM IST

வந்தே பாரத் ரெயில் இயக்கத்தில் நேர மாற்றத்தை ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.

சூரமங்கலம்

சென்னையில் இருந்து சேலம். ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ெரயிலின் சேவையில் குறிப்பிட்ட பகுதியில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ெரயில் இயக்க நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தெற்கு ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்டிரல்- கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (20643) நாளை (திங்கட்கிழமை) முதல் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ெரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சேலத்திற்கு மாலை 5.58 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படும் நிலையில் நாளை முதல் 10 நிமிடத்திற்கு முன்பாக அதாவது மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

இதேபோல் ஈரோட்டிற்கு மாலை 6.47 மணிக்கு வந்து 6.50 மணிக்கு புறப்பட்ட நிலையில் இனி மாலை 6.37 மணிக்கு வந்து 6.40 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 7.25 மணிக்கு வந்து 7.27 மணிக்கு புறப்பட்ட நிலையில் இனி இரவு 7.18 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். ஜோலார்பேட்டை- சேலம் மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயிலின் இயக்க வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் 10 நிமிடத்திற்கு முன்பாக சேலம், ஈரோட்டிற்கு வந்து செல்லும்படி நேர மாற்றத்தை ெரயில்வே நிர்வாகம் அறிவுறுத்துள்ளது.

மேலும் செய்திகள்