< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
கடையநல்லூர் அருகே புலி நடமாட்டம்?
|12 Sept 2022 9:54 PM IST
கடையநல்லூர் அருகே புலி நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகியது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அருகே கல்லாற்று பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது.
இதுகுறித்து கடையநல்லூர் ரேஞ்சர் சுரேஷ் கூறுகையில், "கல்லாற்று பகுதியில் கடந்த சில நாட்களாக அதிக அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் கல்லாற்று பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி நடமாடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இந்த வீடியோ உண்மையல்ல. இது கடையநல்லூர் அருகே மக்கள் நடமாட்டம் உள்ள கல்லாற்று பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது வனத்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.