< Back
மாநில செய்திகள்
பஸ்சில் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு
மாநில செய்திகள்

'பஸ்சில் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு

தினத்தந்தி
|
4 July 2022 7:14 PM IST

பஸ்சில் நடத்துநர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இந்தமாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் 100-க்கு கீழ் இருந்த தொற்று பரவல் தற்போது 3000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பஸ்சில் நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பஸ்சில் பயணம் செய்கின்றனர். பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கும் போது எச்சில் தொட்டு வழங்கக் கூடாது. இதனால் பயணிகளுக்கு மன உளைச்சலும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

எச்சிலுக்கு பதிலாக தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக ஒழிக்க முடியும் என்று போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்