நாமக்கல்
லாரி டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|குற்ற செயல்களில் ஈடுபட்ட லாரி டிரைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ராசிபுரம்
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கார் கூடல்பட்டி ஊராட்சி மெட்டாலா புது காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கவின் (வயது 28). லாரி டிரைவர். இவர் தொடர்ந்து பல அடிதடி வழக்குகளில் தொடர்பு இருந்ததாலும் கடந்த மாதம் யுவராஜ் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாலும் ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கவினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயாசிங் கவினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையொட்டி பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் சேலம் மத்திய சிறையில் உள்ள கவினிடம் அதிகாரிகள் அதன் நகலை வழங்கினர்.